நீண்ட நேரம் லேப்டாப்பில் வேலை செய்வது, அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, ஓய்வு நாட்களில் நீண்ட நேரம் படுத்துக்கொண்டே இருப்பது, இதனால் பலருக்கும் அதீத முதுகுவலி ஏற்படுகிறது. இதற்காக மருத்துவமனைக்கு போக வேண்டுமா என நினைத்து அந்த முதுகுவலியுடனே வாழ பழகி கொண்டனர். உண்மையில் முதுகுவலியை போக்க மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படுவது இல்லை.
இந்த உயிரை எடுக்கும் முதுகுவலியை போக்க நடைப்பயிற்சி மேற்கொள்வதே போதுமானது. நடைப்பயிற்சி செல்லும் நபர்களிடம் நடத்திய ஆய்வில் முதுகுவலியால் அவதிப்படும் மக்கள் நடைபயிற்சி மூலம் நிவாரணம் அடைந்தது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் உடல் தசைகளை நடைப்பயிற்சி வலுப்படுத்துகிறது. நடைப்பயிற்சியின் போது உடலில் core எனப்படும் மையம் நன்றாக இயங்கும். இதனால் உடலுக்கு சமமான அழுத்தம் கிடைக்கிறது. மேலும் உடல் தசைகள் தளர்வாகவும், குறிப்பாக முதுகெலும்புடன் தொடர்பான தசைகள் தளர்வாகவும் வலுவாகவும் இயங்குகிறது. இதனால் முதுகுவலி குறைகிறது.
ஒருநாளைக்கு 10-20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவதன் மூலம் முதுகுவலியை சரிசெய்யலாம். அதீத முதுகுவலி இருந்தால் 30 நிமிடங்கள் முதல் நம் உடல் தாங்கும் வரை நடைப்பயிற்சி செய்யலாம். நடக்கும் போது உடலை நேர்கோட்டில் வைக்க வேண்டும். உடலை தளர்வாகவும். நிமிர்ந்தும் வைக்க வேண்டும். இவ்வாறு தினசரி நடைப்பதன் மூலம் உடல்நிலை சீராவதுடன் மனசோர்வுகளும் அகலும். உடலில் இருக்கும் பல உடல் உபாதைகள் சரியாகும்.
Read more: இதை மட்டும் தினமும் செய்தால் போதும்.. உங்களுக்கு பக்கவாதமே வராது!!