குழந்தைகளுக்கு எல்லா ஊட்டச்சத்துகளும் நிறைவாக கிடைக்கும் உணவு என்று ஒன்று இருந்தால் அது கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும். ஆனால் நாம் மற்ற உணவுகளை கொடுக்கும் போது, அது குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாமல் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள ஏற்படுத்தி விடும். இதனால் கட்டாயம் மற்ற உணவுகளை கொடுக்கவே கூடாது.
எப்போது உங்கள் குழந்தைக்கு 180 நாள் முடிந்து 181 நாள் தொடங்கிறதோ அப்போது தான் நாம் தாய்ப்பால் தவிர மற்ற உணவுகளை கொடுக்க வேண்டும். பலர் 3 மாதங்களிலேயே ராகி கூழ் போன்ற உணவுகளை கொடுத்துவிடுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. குழந்தையின் வளச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் பாலிலேயே கிடைத்து விடும்.
ஒரு சிலர் தாய்க்கு பால் இல்லை என்று கூறி, மற்ற உணவுகளை குழந்தைக்கு கொடுப்பது உண்டு. அதுவும் தவறு தான். குழந்தை எந்த அளவிற்கு பால் குடிக்கிறதோ, அந்த அளவிற்கு பால் சுரக்கும். ஒரு வேலை பால் சுரைக்க வேறு ஏதாவது உணவுகளை சாப்பிட நீங்கள் விரும்பினால், நீங்கள் ஒரு சில உணவு முறைகளை பின்பற்றலாம்.
அந்த வகையில், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்க கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், பட்டாணி உள்ளிட்ட பயிறு வகைகளை உணவுகளை ஊறவைத்து தாளித்து சாப்பிட்டு வரலாம். இதில் ப்ரோட்டீன் சத்து அதிகமாக உள்ளதால் பால் சுரப்பு அதிகமாக ஆகும்.
தாய்ப்பால் அதிகமாக சுரக்க தாய்மார்கள் அனைவரும் மட்டன், சிக்கன், கருவாடு, மீன் போன்றவை சாப்பிட வேண்டும். மேலும், முட்டை, சிக்கன், குழம்பு மீன் முக்கியமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை உள்ளது. சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும், பால் சுரப்பு குறைந்து விடும்.
இதனால் முடிந்த வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம், பகலில் தூங்கி விடுங்கள். தாய்ப்பால் உற்பத்தி குறைவிற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். இச்சத்தில் குறைபாடு இருந்தால் தாய்ப்பாலை வறட்சியடையச் செய்து விடும். குழந்தையின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் போடும் முதல் அடித்தளம் இந்த தாய்ப்பாலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் பால் சுரக்க கடைகளில் இருக்கும் கண்ட பொடிகளை வாங்கி குடிக்காமல், வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே தாய்ப்பாலை அதிகரிப்பது நல்லது.