fbpx

ஜாக்கிரதை.. மகளிர் தின பரிசு மோசடி.. போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்..

எந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதோ, அதே அளவுக்கு சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மோசடி செய்வது இப்போது வாடிக்கையாகி விட்டது. இலவச பொருட்கள் தருவதாகவும், இந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் பணம் மற்றும் பரிசுகள் கிடைக்கும் என்பது போன்ற பல போலி செய்திகள் வாட்ஸ் ஆப்-ல் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வலம் வருகிறது.. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரபலமான ஷாப்பிங் இணையதளங்களில் பெயரில் இந்த மோசடி செய்திகள் பரவி வருகின்றன..

மகளிர் தினத்தை முன்னிட்டு, வினாடி வினா போட்டி நடத்தப்படுவதாகவும், அதில் வெற்றி பெற்றால், இலவச சலுகைகள் மற்றும் “ஆச்சரியமான பரிசுகள்” கிடைக்கும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது..இந்த “வினாடி வினா போட்டியில் பங்கேற்கும் முதல் 5,000 பெண்களுக்கு” பரிசுகளை வழங்கப்படும் என்று கூறி ஒரு லிங்கையும் அனுப்பி வருகின்றனர்..

ஒரு பயனர் வாட்ஸ்அப் தொடர்புகளுடன் இணைப்பைப் பகிர்ந்து கொண்டால், 5G மொபைல் சலுகைகளை பெறலாம் என்று கூறி ஏமாற்றுகின்றனர்… எனவே இந்த போலி இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..

காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்த போலி இணைப்புகள், சைபர் குற்றவாளிகளால் பரப்பப்படுகின்றன இதுபோன்ற இணைப்புகளைக் கிளிக் செய்வதை தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் இணைய மோசடிக்கு ஆளாக நேரிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

இந்த காய்ச்சலால் இதுவரையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

Tue Mar 7 , 2023
இந்தியா முழுவதும் தற்போது ஒரு புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசின் சார்பாக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் சுமார் 1000 பகுதிகளில் வரும் 10ம் தேதி மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது நாடு முழுவதும் காய்ச்சல் […]

You May Like