fbpx

முடிவுக்கு வந்தது பாரதி கண்ணம்மா சீரியல்….! கண்ணம்மாவுடன் இணைந்தாரா பாரதி….?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் மெகா தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொலைக்காட்சியில் பல நெடுந்தொடர்கள் ஓடினாலும் தாய்மார்கள் அனைவரும் கூர்ந்து கவனிக்கும் ஒரு நெடும் தொடராக பாரதி கண்ணம்மா நெடுந்தொடர் உள்ளது.

3 வருடங்களுக்கு மேலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மிக விரைவில் முடிவுக்கு வருகிறது என சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை இதோ முடிந்து விடும், அதோ முடிந்து விடும், அடுத்த வாரம் முடிந்து விடும் என தகவல்கள் மட்டுமே வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் உறுதியாக எந்த ஒரு முடிவும் தெரியவில்லை.

இந்த நிலையில் தான் பாரதி, கண்ணம்மா தொடரின் தற்போதைய நிலவரப்படி இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது என்று தெரிய வந்திருக்கிறது. பாரதியின் நினைவுகளை மீட்டெடுக்க கண்ணம்மா போராடி வருகிறார்.

பாரதியின் நினைவுகள் வந்த பிறகு பாரதியும், கண்ணம்மாவும் ஒன்றிணைந்து விட்டால் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என சொல்கிறார்கள்.

ஆனால் சமீபத்தில் வெளியான ரோமாவை பார்க்கும் பொழுது இருவரும் இணைய போவதை போல தான் காட்டியிருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் இணைவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்கவிருக்கிறது என்பதை.

Next Post

“ நான் மறுத்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்தார்.” பிரபல நடிகை ஓபன் டாக்..

Mon Jan 23 , 2023
பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள ஆயிஷா என்ற மலையாள படம் கடந்த வாரம் வெளியானது.. இந்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மஞ்சு வாரியர் “ அசுரன் படத்திற்கு முன்பே தமிழ் படங்களில் நடிக்க எனக்கு அதிக வாய்ப்புக்கள் வந்தது.. அப்போது மலையாளத்தில் பிசியாக இருந்ததால் என்னால் தேதி ஒதுக்க முடியவில்லை.. மேலும் சில பிரச்சனைகள் காரணமாக என்னால் அப்போது நடிக்க முடியாமல் போனது.. ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் […]

You May Like