fbpx

“பவதாரிணி இந்த ஒரு விஷயத்துல கவனமா இருந்து இருக்கலாம்..” உயிரைப் பறித்த அலட்சியம் .? மரணத்தில் வெளியான புதிய தகவல்.!

இசைஞானி இளையராஜாவின் மகளும் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரின் சகோதரியும் தேசிய விருது பெற்ற பாடகியுமான பவதாரிணி கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார் . அவருடைய இறுதிச்சடங்கு தேனி அருகில் உள்ள இளையராஜாவின் சொந்த ஊரில் வைத்து நடைபெற்றது .

பிரபல பாடகியான பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை இரவு மரணம் அடைந்தார் . அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகமே அஞ்சலி செலுத்தியது. இசைஞானி இளையராஜாவின் வீட்டில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக விளங்கியவர் பாடகி பவதாரிணி. இவர் பாடகியாக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

பவதாரிணிக்கு புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட போது கல்லீரல் புற்றுநோயின் நான்காம் நிலையில் இருந்தது. மிகவும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த பவதாரிணி புற்றுநோய் நான்காவது நிலையை அடையும் வரை எவ்வாறு கவனிக்காமல் இருந்தார் என்பது தொடர்பான சந்தேகம் அனைவருக்கும் எழுந்து வருகிறது. இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது . சில வருடங்களுக்கு முன்பு கணையத்தில் இருக்கும் கற்களை அகற்றும் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் பவதாரிணி. அதன் பிறகும் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கிறது.

எனினும் அதனை சாதாரணமாக நினைத்து வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டு வந்திருக்கிறார். இதன் காரணமாக உடனடி தீர்வு கிடைத்தாலும் அவரது கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி வேகமாக வளர்ந்தது தெரியாமல் இருந்திருக்கிறது . இதனைத் தொடர்ந்து புற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் தான் பரிசோதனை செய்து பார்த்தபோது கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது. அவருக்கு ஆரம்ப கட்ட அறிகுறிகள் இருக்கும்போதே இது தொடர்பாக முறையான பரிசோதனைகள் செய்திருந்தால் ஒருவேளை காப்பாற்றப்பட்டிருக்கலாம் என மக்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர் .

Next Post

"ராகுல், மல்லிகார்ஜுனா கார்கே இந்தியா கூட்டணி பூசலுக்கு முக்கிய காரணமா..?" மௌனம் கலைத்த ஐக்கிய ஜனதா தள தலைவர் கே.சி தியாகி .!

Sun Jan 28 , 2024
வர இருக்கின்ற 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் தலைமையில் திமுக திரிணாமுல் காங்கிரஸ் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஐக்கிய ஜனதா தளம் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல முன்னணி கட்சிகள் இணைந்து இந்தியா என்ற வலுவான கூட்டணியை கட்டமைத்தது. இந்தக் கூட்டணி தொகுதி பங்கீடு பிரதமர் வேட்பாளர் போன்றவை தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் திடீரென பிளவு ஏற்பட்டிருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் […]

You May Like