fbpx

இந்தியர்களுக்கு பெரும் நெருக்கடி!. “சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்”!. அமெரிக்காவை தொடர்ந்து கனடா நடவடிக்கையா?.

Ruby dhalla: தான் பிரதமரானால், கனடாவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் நாடு கடத்துவேன் என்று பிரதமர் வேட்பாளர் ரூபி தல்லா கூறியிருப்பது இந்தியர்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கனடாவில் நடந்த காலிஸ்தான் தலைவர் கொலைக்கு இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்‌ ஷா, இந்திய தூதரக அதிகாரிகளை காரணம் காட்டியது எப்படி இந்திய – கனடா உறவில் விரிசல் ஏற்படுத்தியதோ, அதே அளவிற்கான பின்னடைவை அவர் கனடா மக்கள் மத்தியிலும் சந்தித்தார். இதையடுத்து கடந்த ஜனவரி 5ம் தேதி கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படமாட்டார். இன்னொருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் வரை, ட்ருடோவே பிரதமராக தொடர்கிறார்.

இதனையடுத்து கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பதே பலரும் முன்வைக்கும் கேள்வி. ட்ரூடோவின் லிபரல் கட்சி இப்போது பொதுத் தேர்தலில் போட்டியிட ஒரு புதிய தலைவரைக் தேட வேண்டும். வரும் மார்ச் 9-ஆம் தேதி இதற்கான வாக்கெடுப்பு நடக்க உள்ளது. ட்ரூடோவின் விலகலையடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ ட்ரூடோவின் வழியில் தானும் அரசியலை விட்டு விலகி தனது முந்தைய ஆசிரியர் பணிக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

அனிதாவைத் தொடர்ந்து நிதியமைச்சர் டொமினிக் லெப்ளாங்க், வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் தொழில் துறை அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் ஆகியோரும் தங்கள் தற்போதைய கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி பிரதமர் போட்டியிலிருந்து நழுவி விட்டனர். இந்தநிலையில், கனடாவின் பிரதமர் வேட்பாளர் ரேஸில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரூபி தல்லாவும் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ரூபி தல்லா இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் பிரதமரானால், கனடாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் நாடு கடத்துவேன் என்று உறுதியளித்துள்ளார்.

கனடாவின் அரை மில்லியனுக்கும் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம், அரை மில்லியன் என்றால் 5 லட்சம்) மக்கள் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. புலம்பெயர்ந்த பெற்றோரின் ஒரு மகளாக நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். புலம்பெயர்ந்தோர் நம் நாட்டை மகத்தானதாக கட்டியெழுப்ப உதவியிருப்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் மனிதர்கள் கடத்தி வரப்படுவதை நாம் தடுக்க வேண்டும். இது சட்டவிரோதமானது. உங்களின் பிரதமராக நான் உங்களுக்கு ஒன்றை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். கனடாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ஒவ்வொருவரையும் நான் நாடு கடத்துவேன். இப்போது தொடங்கி கனடா மீண்டு வருகிறது” என கூறியுள்ளார்.

அதாவது, கனடா, அமெரிக்கா இடையே தற்போது மோதல் போக்கு உள்ளநிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், சட்டவிரோதமாக குறியேறியவர்கள் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதேபோல் கனடாவின் பிரதமர் வேட்பாளரும் அறிவித்துள்ளது இந்தியர்கள் மத்தியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது .

Readmore: தேசிய செய்தித்தாள் தினம் 2025!. இந்தியாவின் அச்சு ஊடகத்தைப் பற்றிய வரலாறு; முக்கியத்துவம்!.

English Summary

Big crisis for Indians!. “Illegal immigrants will be deported”!. Will Canada follow the US?.

Kokila

Next Post

1000 சிவனுக்கு சமம்.. புராணக் கதைகளுக்கு பெயர் பெற்ற சோமேஸ்வரசுவாமி கோவில்..!! எங்க இருக்கு தெரியுமா..?

Wed Jan 29 , 2025
Someswaraswamy Temple is famous for its mythological stories..!! Do you know where it is?

You May Like