ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி வருகின்றனர். இந்நிலையில் 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான வேலைவாய்ப்பு முகாம் சென்னை புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024 டிசம்பர் 14ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும், 8, 9, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டய படிப்பாளர்கள், ஐடிஐ தொழில் கல்வி, பொறியியல் பட்டம், கணினி இயக்குனர்கள் மற்றும் தையல் கற்றவர்கள் என பல்வேறு தகுதிகளுடன் கூடியவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளன.
இதில் கலந்துகொள்ள விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அத்துடன், https://forms.qle/qsZbxrrSn547L9ep7 என்ற Google Link-ஐ பயன்படுத்தி தங்களது விவரங்களை பதிவு செய்து, முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகா கலந்துகொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்-ஐ நேரில் அணுகியோ அல்லது Google Link-ல் பதிவு செய்துக் கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Read More : மாதம் ரூ.40,000 வரை சம்பளம்..!! POWERGRID ஆணையத்தில் வேலை..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!