fbpx

இதற்கு இன்னும் 3 மாத காலம் அவகாசம் இருக்கிறது…..! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு பெருமூச்சு விடும் குடும்ப தலைவர்கள்…..!

நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயனடைவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. நியாய விலை கடை. சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் மலிவான விலையில் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதாவது ரேஷன் கார்டுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது.

அதனால் மக்கள் பலர் ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு இணைக்கும் பணியை துரிதமாக செய்து வந்தனர் ஆனால் இன்னும் பலர் இந்த இணைப்பை மேற்கொள்ளாமல் இருப்பதால் அரசு இதற்கு மேலும் அவகாசம் வழங்கி உள்ளது.

அதோடு ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் விட்டுவிட்டால் பின்பு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இதனை நிச்சயம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு கட்டாயமாக உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி உடன் இதன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது இதற்கான கடைசி தேடி செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. உணவும் மற்றும் பொது விநியோகத்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்த கால அவகாசம் முடிவதற்கும் ரேஷன் கார்டை ஆதார் நம்பர் உடன் இணைப்பது நல்லது என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக, ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அதாவது உணவு வழங்கல் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று அதில் ஆதாருடன் ரேஷன் கார்டு இணைப்பதற்கான வசதி இருக்கும் பகுதிக்கு சென்று ஆதார் ரேஷன் குறித்த விவரங்களை அதில் பதிவிட்டு மொபைல் நம்பரையும் உள்ளிட்டு proceed submit செய்ய வேண்டும். மேலும் மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி பதிவிட வேண்டும். இப்படி செய்தால் ஆதார் நம்பரை ரேஷன் கார்டுடன் இணைத்து விடலாம்.

மேலும் இணையத்தை பயன்படுத்தாமல் நீங்கள் நேரடியாக சென்று ரேஷன் கார்டு ஆதார் நம்பர் உடன் இணைக்க விரும்பினால் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது ஆகிய உங்களுடைய ரேஷன் கார்டு ஆதார் நம்பருடன் இணைக்கப்பட்டு விடும்.

Next Post

ஜூலை 8ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!! எதற்காக தெரியுமா..?

Sun Jul 2 , 2023
ஜூலை 8 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரிடையே கடந்த மே 3 ஆம் தேதி ஏற்பட்ட மோதல் 2 மாதங்கள் தாண்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த கலவரத்தை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் மெய்தெய் சமூகத்தினர் தங்களது உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். அதாவது, மெய்தெய் […]

You May Like