Ramoji Rao: உலகின் மிகப்பெரிய ஃபிலிம் சிட்டி தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ்(87) உடல்நலக் குறைவால் காலமானார்.
ஹைதராபாத்தின் அப்துல்லாபூர்மெட்டில் அமைந்துள்ள ஒரு ஒருங்கிணைந்த திரைப்பட ஸ்டுடியோவான ராமோஜி பிலிம் சிட்டி உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அதாவது, இந்த ஸ்டுடியோ 1,666 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ராமோஜி ராவ் என்பவரால் 1991 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ராமோஜி ஃபிலிம் சிட்டி ஹைதராபாத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.
பாகுபலி, பொன்னியின் செல்வன், புஷ்பா, வலிமை, லியோ போன்ற பிரபல திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன. ராமோஜி ஃபிலிம் சிட்டி ஒரே நேரத்தில் 20 பட யூனிட்களை ஆதரிக்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக உள்ளது. இங்கு ஹாலிவுட் சிக்னேஜ், ஜப்பானிய கார்டன்ஸ், லண்டன் ஸ்ட்ரீட், விமான நிலையம், மருத்துவமனை, இயற்கைக்காட்சிகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட பல படப்பிடிப்பு இடங்கள் உள்ளன.
இத்தகைய பிரமாண்டத்தை உருவாக்கிய ராமோஜி ராவ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Readmore: ஷாக்!… கங்கனாவை அறைந்த பெண் காவலர் கைது!