நியூயார்க்கில் மழை!… நாளை இந்தியா- பாக்., போட்டி நடக்குமா?… வானிலை முன்னறிவிப்பு!

India VS Pak: நியூயார்க்கில் நாளை 51 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுமா நடக்காதா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 19-வது லீக் போட்டி ஜூன் 9ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 34 ஆயிரம் இருக்கைகளுடன் நாசாவ் கவுண்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரிய மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி அமெரிக்க நேரப்படி காலை 10:30 மணிக்கு துவங்க உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி துவங்கும்.

இந்தநிலையில், நியூயார்க்கில் காலை 11 மணி அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையின்படி சரியாக காலை 11 மணிக்கு 51 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மாலை 4 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு அறிக்கை கூறி உள்ளது. 51 சதவீதம் வாய்ப்பு மட்டுமே இருப்பதால் லேசான தூறலுடன் மழை நிற்கவும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம், மழை பெரிதாக பெய்து போட்டி தடைபடவும் வாய்ப்பு உள்ளது.

Readmore: பெரும் சோகம்!… உலகின் மிகப்பெரிய ஃபிலிம் சிட்டி தலைவர் ராமோஜி ராவ் காலமானார்!

English Summary

There is a 51 percent chance of rain in New York tomorrow, so will the T20 cricket match between India and Pakistan take place?

Kokila

Next Post

ஹெலிகாப்டரில் இருந்து கார் மீது பட்டாசு வெடித்த பெண்கள்!… வீடியோ வெளியிட்ட பிரபல யூடியூபர் கைது!

Sat Jun 8 , 2024
Popular YouTuber Alex Choi has been arrested after posting a video of two women shooting firecrackers at a Lamborghini from a helicopter.

You May Like