fbpx

NEWS ALERT: ‘ராமர் கோவில்’ கும்பாபிஷேகத்திற்கும் முன் பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக.! பிள்ளையார் சுழி போட்ட ஜே.பி நட்டா.!

2024 ஆம் வருட பொதுத் தேர்தலுக்கான பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கி இருக்கிறது. இந்த பொது தேர்தலுக்கான சுவர் விளம்பர பணிகளை அந்தக் கட்சியின் தலைவர் ஜே.பி நட்டா டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பொது தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு பொது தேர்தல்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. விலைவாசி ஏற்றம் மற்றும் சமூக பிரச்சினைகளால் பொதுமக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா. கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இவர்களுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தேர்தலை சந்திக்க உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தற்போது இருந்தே தேர்தலுக்குரிய வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை தற்போது இருந்தே தொடங்கி இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு பொது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுவர் விளம்பரத்தை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜேபி நட்டா டெல்லியில் தொடங்கி வைத்திருக்கிறார். ஆளும் கட்சியாக இருந்தாலும் பாரதிய ஜனதா தற்போது இருந்தே தனது தேர்தல் யுக்திகளை நடைமுறைப்படுத்த தொடங்கி இருக்கிறது. எனினும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பது அரசியல் வட்டாரங்களில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

சூரிய ஒளியே இல்லாத கிராமம்!… செயற்கை சூரியனை உருவாக்கி அசத்தல்!… எந்த நாட்டில் தெரியுமா?

Tue Jan 16 , 2024
பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் சூரியனும் அதன் ஒளியும் மிகவும் முக்கியம். குளிர்காலத்தில் மனிதனுக்கு சூரிய ஒளி அதிகம் தேவைப்படுகிறது. இருப்பினும், உலகின் பல பகுதிகளில் பல மாதங்களாக சூரிய ஒளி இல்லை. ஆனால் எந்த ஒரு சாமானியனும் யோசிக்க முடியாத ஒரு தீர்வை ஒரு கிராமம் கண்டுபிடித்தது. உண்மையில் சூரிய ஒளியைப் பெறுவதற்காக இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாங்களே செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். இத்தாலியில் உள்ள ஒரு கிராமத்தில் […]

You May Like