fbpx

தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கூறிய விவகாரம்- ராகுல் காந்தி மீது பாஜக புகார்

மக்களவைத் தேர்தலை “மேட்ச் பிக்ஸிங்” என கூறிய ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.

இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று (மார்ச் 31) நடந்த பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின்போது பணம் கொடுத்து வீரர்களை வாங்கியோ, நடுவர்களுக்கு அழுத்தம் தந்தோ, அணியின் கேப்டன்களை மிரட்டியோ வெற்றிபெற்றால் அதை ‘மேட்ச் பிக்ஸிங்’ என்கின்றனர்

அதனை தொடர்ந்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நேற்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலை மேட்ச் பிக்ஸிங் என கூறினார். மத்திய அரசு தனது ஆட்களை தேர்தல் ஆணையத்துக்குள் அனுப்பியுள்ளது என்றும் அவர் கூறினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, ராகுல் காந்தி மற்றும், இதர காங்கிரஸ் தலைவர்கள், இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” என தெரிவித்தார்.

அதேபோல, இப்போது மக்களவை தேர்தல் என்ற போட்டி தொடங்கி உள்ளது. இதில் ‘மேட்ச் பிக்ஸிங்’கில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இண்டியா கூட்டணியை சேர்ந்த 2 தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்டவை எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைக்கின்றன. இவை அனைத்துமே ‘மேட்ச் பிக்ஸிங்’தான்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண்குமார் அடங்கிய பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்திக்கு எதிராக புகார் அளித்தனர்.

Next Post

Gyanvapi Masjid | இந்துக்களின் பூஜைக்கு தடை விதிக்க முடியாது.!! ஞானவாபி மசூதி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி.!!

Mon Apr 1 , 2024
Gyanvapi Masjid: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்துவதை தடை செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இருப்பினும், மசூதி வளாகத்திற்குள் இந்துக்கள் மத அனுஷ்டானங்களை நடத்துவது குறித்து தற்போதைய நிலை தொடரும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜனவரி 17 மற்றும் ஜனவரி 31 தேதியிட்ட உத்தரவுகளுக்குப் பிறகு முஸ்லீம் சமூகம் […]

You May Like