தமிழக பாரதி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன். கடந்த 2021 ஆம் ஆண்டு இவரது ஆபாச வீடியோ வெளியானதை தொடர்ந்து கட்சிப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலில் இருந்தும் விலகி இருந்தார். இந்நிலையில் தற்போது இவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக டிவி விவாதங்களில் பங்கு பெற்று தமிழக அரசியல் களத்தில் பிரபலமானவர் கே.டி ராகவன். இவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து படிப்படியாக உயர்ந்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் ஆபாச வீடியோ புகாரில் சிக்கினார்.
இவர் தொடர்பான ஆபாச வீடியோ வெளியாகி தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகிய இவர் அரசியலில் இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகள் ஒதுங்கி இருந்தார். சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராகவனை பாரதிய ஜனதா தலைவர்கள் சென்று நலம் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொறுப்பாளர்களை நியமித்து பட்டியல் ஒன்றை அந்தக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் காஞ்சிபுரம் தொகுதியின் பொறுப்பாளராக ராகவன் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் அந்தக் கட்சியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபாச வீடியோவில் சிக்கியிருப்பவருக்கு பதவி கொடுப்பதாய் என பாரதிய ஜனதா கட்சிக்குள் பூசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.