fbpx

“பெண்களை மதிக்கும் பாஜக.. அண்ணாமலை தலைமையில் அசுர வளர்ச்சி”.! EX CONGRESS எம்.எல்.ஏ விஜயதாரணி பேட்டி.!

காங்கிரஸ் கட்சியின் தமிழக எம்எல்ஏவாக இருந்தவர் விஜயதாரணி. பல ஆண்டுகளாக அந்த கட்சியில் பயணித்த இவர் திடீரென காங்கிரஸில்(Congress) இருந்து விலகி சில தினங்களுக்கு முன் மத்திய இணையமைச்சர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். இது மத்திய அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பின்பு, டெல்லியில் இருந்து கோவை திரும்பிய அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 37 ஆண்டுகளாக காங்கிரஸ்(congress) கட்சியில் பணியாற்றிய தனக்கு, கடந்த 7 ஆண்டுகளாக உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு உரிய மரியாதை இல்லை என்றும் அவர் கூறினார்.

வேறு எந்த கட்சியிலும் சேராமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கடந்த 37 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய தனக்கு கடந்த ஏழு வருடங்களாக உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு தலைமை பதவி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், பெண்களால் தலைமை பதவியேற்று சிறப்பாக செயல்பட முடியாதா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியில் பல பெண் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு மதிப்பு தருகிறது . பெண்களின் தலைமை பண்பை பாரதிய ஜனதா கட்சி மதிப்பதால், இந்த கட்சியில் தன்னை இணைத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஏற்றத்திற்கு பல சட்டங்களை பாஜக அரசு இயற்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நம் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை தலைமையில் பல வளர்ச்சிகளை கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அண்ணாமலையின் யாத்திரை பயணத்தில் தமிழக பாஜக வளர்ச்சி அடைந்திருக்கிறது. அவரது இந்தப் பயணம், என் போன்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது கூறினார். மேலும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவது பற்றி கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார் .

English Summary: BJP appreciates women achievements under the leadership of Annamalai BJP is rising in Tamil Nadu. Ex Congress party MLA Vijaya Dharani speech after joining BJP.

Read More: ஜான் சினா மற்றும் அல்லு அர்ஜுனின் மகனுக்கு ஷாருக்கான் கொடுத்த Shock Reply.! ‘Ask SRK’ அமர்வில் வெளிவந்த ருசிகர தகவல்.!

Next Post

Annamalai | ’அடுத்த 100 நாளில் தரமான சம்பவம்’..!! ’நான் உறுதியாக கூறுகிறேன்’..!! அண்ணாமலை அதிரடி..!!

Mon Feb 26 , 2024
அடுத்த 100 நாளில் ஜி.கே.வாசன் அறிவுறுத்தலின் பேரில் வளமான கூட்டணி அமையும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு பாஜகவும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் […]

You May Like