ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு, இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், தேர்தல் பத்திர ஊழல் வழக்கில், பாஜக மட்டுமல்ல, ED, CBI, I-T அதிகாரிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனா சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனா சிங் கூறியதாவது, “இந்த நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளால் பாஜக அரசை அகற்ற வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர். ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும் என்பதால் அவர்கள் (பாஜக) எத்தனை ஊழல்களை வேண்டுமானாலும் செய்யலாம். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு, இந்தியக் கூட்டணி ஆட்சி அமைத்தால், பாஜக தலைவர்கள் மட்டுமல்லாது, ED, CBI, I-T அதிகாரிகளும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் .”
“இப்போது உங்கள் முடிவு நெருங்கிவிட்டது என்பதை பாஜகவிடம் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இப்போது நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு, இந்திய கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு, நாட்டின் மிகப்பெரிய தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்கப்படும். பாஜக தலைவர்கள், ED, CBI மற்றும் IT அதிகாரிகளும் சிறைக்கு செல்வார்கள், ஏனெனில் அவர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்” என்று அதிஷி கூறினார்.
மேலும் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து பேசிய அதிஷி, “உயர் நீதிமன்றத்தை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நாங்கள் “மரியாதையுடன் ஏற்கவில்லை”. ஏனெனில் இந்த மதுபான ஊழல் என்று கூறப்படுவது பாஜகவின் அரசியல் சதி. இந்த சதி தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி கட்சியை பாஜக தோற்கடிக்க முடியாமல் போனபோது உருவானது, இதற்காக ED மற்றும் CBI பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும் முழு வழக்கும் வற்புறுத்தலின் மூலம் எடுக்கப்பட்ட அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்காத வரை சாட்சிகள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அல்லது தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் அதிஷி மர்லேனா சிங்.
முன்னதாக, மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஆனால், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை வாரத்திற்கு ஒருமுறை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Read More: MDH & Everest மசாலாக்களை பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா..? இந்திய மக்களுக்கு FSSAI கூறுவது என்ன..?