அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியில், 48 வயதான அனிகுட்டன் (எ) அனில்குமார் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு, 40 வயதான உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரது மனைவி உமா, பத்துகாணி சந்திப்பு பகுதியில், மளிகை கடை ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். ஆட்டோ ஓட்டாத நேரங்களில் அனில்குமார் தான் மளிகை கடையை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று, பத்துகாணி நிஜாபவன் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரான 52 வயது மதுகுமார், உமாவின் கடைக்கு சென்று, உமாவுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த அனில்குமார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த உமா, தனது கணவரை கம்பால் தாக்கியுள்ளார். இதில் அனில்குமார் பலத்த காயம் அடைந்துள்ளார். அது மட்டும் இல்லாமல், பாஜக மதுகுமாரும் அனில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், கத்தியால், அனில்குமாரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் அனில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அனில்குமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அனில்குமார் நடந்த சம்பவங்கள் குறித்து ஆறுகாணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பாஜக பிரமுகர் மது குமார் மற்றும் உமாவை தேடி வருகின்றனர்.