இயக்குனர் வெற்றிமாறன் பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ வானத்தை சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், வி.சி.க கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், ‘திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது என்று சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது’ என, பேசியுள்ளது கண்டனத்துக்குரியது.தமிழகம் ஹிந்துக்களின் ஆன்மிக பூமியாக இருந்து வருகிறது. அந்நிய படையெடுப்பால் இங்கு அந்நிய மதங்கள் வந்துள்ளன.
சேர, சோழ, பாண்டியர்கள் கட்டிய, 30 ஆயிரம் கோவில்கள் இங்கு உள்ளன. ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளை கடந்து நம் ஹிந்து வழிபாட்டு அடையாளமாக உள்ளது.இன்றும், இந்தியாவில் பிற மதங்களின் ஆதிக்கம் உள்ளது; மத மாற்றங்கள் தொடர்கின்றன.ஹிந்து மத கலாசாரத்தை அழித்து ஒழிக்க, பல நுாறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சி தான் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சு. ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை ஹிந்து அல்ல என்று சொல்லவும் துணிந்திருக்கின்றனர்.
இது ஹிந்து கலாசாரத்தை அழிக்கும் சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை என்றால், இந்த மண்ணில் வேறு யாருமே ஹிந்து இல்லை என தெரிவித்துள்ளார்.