fbpx

BJP: நான் போட்டியிட போவதில்லை என உ.பி‌ தொகுதி பாஜக எம்.பி‌ அறிவிப்பு…! என்ன காரணம்…?

உ.பி பராபங்கி தொகுதி பா.ஜ.க எம்.பி உபேந்திர சிங் ரவாத் தான் போட்டியிட போவதில்லையென அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சிட்யின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே. வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 34 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதே போல பாஜக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் திரை நட்சத்திரங்களுக்கு கணிசமான இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஹேமமாலினி, கேரள நடிகர் சுரேஷ் கோபி, ஹிந்தி நடிகர் ரவி கிஷன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் – விதீஷா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே ஆண்டனியின் மகன் அணில் ஆண்டனிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது பாஜக. இந்த நிலையில் உ.பி பராபங்கி தொகுதி பா.ஜ.க எம்.பி உபேந்திர சிங் ரவாத் தான் போட்டியிட போவதில்லையென அறிவித்துள்ளார்.

உ.பி பராபங்கி தொகுதி பா.ஜ.க எம்.பி உபேந்திர சிங் ரவாத், அதே தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். உபேந்திர சிங் ராவத் இருக்கும் ஆபாச வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் இவ்வாறு அறிவித்திருக்கிறார். நேற்று மேற்கு வங்கத்தை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

Modi: உள்துறை அமைச்சராகும் அண்ணாமலை?… இன்னொரு வாய்ப்பும் இருக்கு!… மோடியின் மாஸ்டர் பிளான்!

Tue Mar 5 , 2024
Modi: கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளதாக வெளியான கருத்து குறித்து பா.ஜ.க., கூட்டுறவுப்பிரிவு மாநில செயலாளர் சிவக்குமரன் கூறியுள்ளார். எதிர்வரும் மக்களவை தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத ஆதரவு பா.ஜ.க.,வுக்கு உருவாகி வருகிறது. மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கைகளும் பா.ஜ.க.,வுக்கு பெரும் நம்பிக்கையினை கொடுத்துள்ளன. தி.மு.க., பெரும் அழிவை சந்திக்கப்போகிறது என பிரதமர் பேசியதின் […]

You May Like