கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல பாஜகவினர். தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கருத்து.
கோவையை சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். பாஜக ஆதரவாளரான இவர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் உமா கார்க்கி26 என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். இரு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாகவும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பெரியார், முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் குறித்தும் அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக திமுகவை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட ஐ.டி.விங்க் ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் என்பவர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை குறித்து நேற்று தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கைதுக்கு அஞ்சுபவர்கள் அல்ல. பாஜகவினரை கைது செய்தால் தான் கட்சி வளரும். ஒரு நாள் சிறைக்குப் போனால் ஒரு வருட கட்சி பணியை செய்தது போலாகும். பேச நடவடிக்கை மூலம் பாஜகவின் முதலமைச்சருக்கு தனது பதிலை கொடுத்துள்ளார்.