fbpx

Annamalai: ஒட்டுமொத்த தேசத்திலிருந்தும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும்…!

ஒட்டுமொத்த தேசத்திலிருந்தும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிடுவதற்கான காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் ஒட்டுமொத்த தேசத்திலிருந்தும் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியதாவது; வயநாடு தேர்தலுக்குப் பிறகு ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்தது.., காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள சீரழிவைக் காட்டுகிறது. காங்கிரஸ் நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக தெற்கில் மட்டும் தோற்கடிக்கப்படக்கூடாது, ஒட்டுமொத்த தேசத்திலிருந்தும் தோற்கடிக்கப்பட வேண்டும். வயநாட்டில் தேர்தல் முடிந்த பிறகு ராகுல்காந்தி வடமாநிலங்களில் ஒரு இடத்தைப் பார்ப்பார் என்று நமது பிரதமர் நரேந்திர மோடி சரியாகச் சுட்டிக்காட்டினார், சரியாகக் கணித்தபடி இன்று வயநாடு மக்களைக் கைவிட்டு ரேபரேலிக்குச் சென்றுவிட்டார்.

சரியாகச் சொன்னால், காங்கிரஸ் கட்சி நமது வாக்காளர்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, பல ஆண்டுகளாக எந்தப் பொறுப்புணர்ச்சியுமின்றி செயல்பட்டு வந்த அரசியல், நமது பிரதமர் மாற்றப் பாடுபடுகிறார். வயநாடு மற்றும் ரேபரேலி தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்படும் போது காங்கிரஸ் கட்சி அதிர்ச்சிக்கு உள்ளாகும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பெரும் சோகம்: சிக்கன் ரைஸ் விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு..!

Sat May 4 , 2024
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது தாய் நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்தவர் பகவதி. பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவர், நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதில் இரண்டை தனது தம்பி ஆதி (18) என்பவர் மூலம் தனது தாத்தா சண்முகநாதன் (72) வசிக்கும் எருமைப்பட்டி அருகே உள்ள […]

You May Like