fbpx

‘9’ கட்சிகளுடன் களமிறங்கும் தமிழக பாஜக.! போட்டியிடும் தொகுதிகள் எத்தனை.? முழு விபரங்கள் இதோ.!

வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக இந்தியா கூட்டணியில் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. மேலும் அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எதிர்க்கட்சியான அதிமுக அதன் தலைமையில் கூட்டணி அமைக்க தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

வருகின்ற 21ஆம் தேதி முதல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இருக்கும் கட்சி நிர்வாகிகள் விருப்பம் மனு சமர்ப்பிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். கடந்த தேர்தல்களில் அதிமுகவுடன் பயணித்த பாஜக இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக போட்டியிடுகிறது. அந்தக் கட்சியும் பல்வேறு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து பொதுத் தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பான கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி 9 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை தமிழகத்தில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அமமுக, தேமுதிக புதிய தமிழகம், ஓ.பன்னீர்செல்வம், ஏ.சி சண்முகம். பாரிவேந்தர் மற்றும் ஜான்பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

இதனைத் தொடர் தேர்வு வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 22 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் மூன்று தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அமமுக மற்றும் தேமுதிக கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்க இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவை தவிர ஏ.சி சண்முகம், பாரிவேந்தர், புதிய தமிழகம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: TN BJP team up with 9 political partes to contest in upcoming general elections. But this news is not yet officially confirmed yet.

Next Post

அதிர்ச்சி.! "எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர் ஆதார் அட்டைகள் செயலிழப்பு" பாஜகவின் அரசியல் நடவடிக்கை.! மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.!

Mon Feb 19 , 2024
NRC சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோட்டமாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள எஸ்.சி எஸ்.டி மற்றும் சிறுபான்மையின மக்களின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு செயல் இழக்க செய்வதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆதார் அட்டைகள் செயலிழக்கச் செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். வங்காளத்தில் ஆதார் அட்டைகள் திடீரென செயலிழக்கச் செய்யப்பட்டதற்கான காரணங்களை அறிய விரும்புவதாக […]

You May Like