திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதி 60 இடங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கல்லூரிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாரதிய ஜனதா கட்சி இலவச ஸ்கூட்டி வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
செபஹிஜாலா மாவட்டத்தில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில், “திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், கல்லூரி செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும்… காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலுக்கு முன்பே, கம்யூனிஸ்டுகள் தோல்வியை ஏற்றுக்கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் டாக்டர் மாணிக் சாஹாவும் திரிபுராவில் வளர்ச்சியை கொண்டு வருவதற்காக உழைத்து வருவதாகவும் அவர் கூறினார். அதேசமயம், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் திப்ர மோதா ஆகிய கட்சிகள் மாநிலத்தில் மீண்டும் நல்லாட்சி கொண்டுவர விரும்புவதாக தெரிவித்தார்.