fbpx

சென்னை வில்லிவாக்கம் அருகே தனியார் காப்பகத்தில் சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை….! பாஜகவின் பெண் பிரமுகர் அதிரடி கைது….!

வில்லிவாக்கம் ராஜாஜி நகர் சிவன் தெருவை சேர்ந்தவர் சரண்யா( 33) வழக்கறிஞரான இவரது மகன் தருண் சாய் சரியாக பேச இயலாத தன்னுடைய பகல் நேரத்தில் கவனித்துக் கொள்வதற்காக வில்லிவாக்கம் சிட்கோ நகர் முதலாவது தெருவில் இருக்கின்ற ஒரு தனியார் காப்பகத்தில் விட்டு செல்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.

இந்த காப்பகத்தை வில்லிவாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேர்ந்த மீனாட்சியை (42) என்பவர் நடத்தி இருந்தார் என்று கூறப்படுகிறது. இவர் பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சமீபத்தில் இவர் மீது ஒரு புகார் மனு வழங்கப்பட்டிருந்தது.

ஆகவே அதில் தனியார் காப்பகத்தில் இருக்கின்ற தன்னுடைய மகன் தருண் சாய் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் இது தொடர்பாக கேள்வி அடிப்படையில், மிரட்டியதாகவும் ஆகவே அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார் இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் மீனாட்சியின் மீதான புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மீனாட்சி கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Post

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு

Fri Jun 23 , 2023
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு 2018ம் ஆண்டு துவங்கி 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்யாமல், […]

You May Like