Sea Shores: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதன் காரணமாக, தென் தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சில நேரங்களில் பலமாகக் காற்று வீசுவதால் கடல் அலையில் சீற்றமும் ஏற்படுகிறது. அந்தவகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடல் அலை 2.1 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2.3 மீட்டர் வரையும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் 2.2 மீட்டர் வரை கடல் அலை எழும்பக்கூடும். மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, தொடர் விடுமுறை காரணமாக இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் கடற்கரை செல்லும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Readmore: திக்!. திக்!. சிறுவர் பூங்காவில் துப்பாக்கிச்சூடு!. 10 பேர் படுகாயம்!. பீதியில் மக்கள்!