உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தன்னை ஆசிர்வதிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
75 வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி; நமது சுதந்திரப் போராட்டத்தின் போது நமது விடுதலைப் போராளிகள் கொடூரத்தையும் கொடுமையையும் சந்திக்காத ஒரு வருடம் இல்லை. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் போது, இந்தியாவுக்கான அவர்களின் தொலைநோக்கு மற்றும் கனவை நாம் நினைவுகூர வேண்டிய நாள் இன்று. பிர்சா முண்டா, டிரோத் சிங் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு போன்ற ஆதிவாசி சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் சுதந்திரப் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகித்தனர் என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி ஊழலை முழு பலம் கொண்டு நாம் எதிர்க்க வேண்டும். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்கள் என்னைஆசிர்வதிக்க வேண்டும். ஊழல் வழக்குகளில் சிறை சென்றவர்கள், வெளியில் வந்து தலைமை பொறுப்புகளை ஏற்கின்றனர். குடும்பநலன், குடும்ப அரசியல்தான் ஊழலுக்கு வழி வகுக்கிறது. குடும்ப நலன் என்ற மோசமான விஷயத்தால் பல திறமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என கூறினார்.