fbpx

ஏரியில் படகு கவிழ்ந்து உயிரிழப்பு…! தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை அறிவித்த பிரதமர் மோடி…!

குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியதாவது; வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்தத் துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் செய்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மகிழ்ச்சி...! வெளியான UPSC மாதிரி ஆளுமை தேர்வு முடிவுகள்...! போக்குவரத்து செலவுக்கு ரூ.5000 வழங்கும் தமிழக அரசு....!

Sat Jan 20 , 2024
தமிழகத்திலுள்ள இளைஞர்கள் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று மைய மாநில அரசுகளின் உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கோடு உருவானது, அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம். இப்பயிற்சி மையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் வெற்றி பெற்று இந்திய அளவில் உயர் பதவியில் செம்மையாக பணியாற்றி வருகின்றனர். இம்மையம் கடந்த ஐம்பத்து ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த பதினோரு ஆண்டுகளாக சென்னையில் […]

You May Like