ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது..

இந்நிலையில் இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு பண்டிகை கால போனஸை வழங்க உள்ளது.. ஹோலி பண்டிகையின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அரசு அறிவிக்கலாம். பிப்ரவரி 28 அன்று தொழிலாளர் அமைச்சகம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களை (AICPI) வெளியிடும் போது, அகவிலைப்படி (DA) அதிகரிப்பு பற்றிய குறிப்பு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
ஒவ்வொரு மாதத்தின் இறுதி வேலை நாளில் AICPI வெளியிடப்படுகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான AICPI குறியீடு, ஜனவரி மாதத்தை விட அதிகரித்தால், அகவிலைப்படி 3% உயரும். இதன் விளைவாக, தற்போதைய 38 சதவீதத்தில் இருந்து, டிஏ 41 சதவீதமாக அதிகரிக்கும்.
41 சதவீதமாக கொண்டு DA 3% உயர்த்தி அரசாங்கம் அறிவித்தால் எவ்வளவு சம்பளம் உயரும்..? மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் எனில், அகவிலைப்படி 41% ஆக உயர்த்தப்பட்டால் அகவிலைப்படி மாதம் ரூ 7,380ஆக இருக்கும்.. தற்போதைய 38% அகவிலைப்படி ரூ. 6,840 ஆக உள்ளது.. எனவே ரூ. 7,380-ல் இருந்து ரூ. 6,840ஐ கழித்தால், மாதம் ரூ.900 சம்பளம் அதிகரிக்கும்.. இதன் மூலம் ஆண்டு சம்பள உயர்வு ரூ 900 X 12 = ரூ 10,800 ஆக இருக்கும்..
குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 56,900 ரூபாய் எனில், அகவிலைப்படி 41% ஆக உயர்த்தப்பட்டால், மாதம் ரூ 23,329 கிடைக்கும்.. தற்போதைய 38% அகவிலைப்படி ரூ. 21,622.. எனவே ரூ. 23,329ல் இருந்து ரூ. 21,622 ஐ கழித்தால், மாத சம்பள உயர்வு ரூ.1,707 ஆக இருக்கும்.. இதனால் ஆண்டு சம்பள உயர்வு ரூ.1707 X 12 = ரூ.20,484 ஆக இருக்கும்..