பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்து இருக்கும் நிலையில் அவர் அங்கு தங்குவதற்காக 17 அறைகள் கொண்ட சொகுசு ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் சென்றடைந்த ரொனால்டோவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அதற்கு அடுத்த நாள் அல்-நசர் கிளப்பின் மைதானத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னுடைய புதிய அணியுடன் பயிற்சியை தொடங்கியுள்ள ரொனால்டோ, ஜனவரி 21 அன்று அல் நசர் அணிக்காக முதல் போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் அல் நசர் கிளப்பில் இணைந்துள்ள கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கிங் சூட் வசதி கொண்ட சொகுசு ஹோட்டல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
99 அடுக்குகளை கொண்ட இந்த சொகுசு ஹோட்டலில் இரண்டு தளங்கள் ரொனால்டோவுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாம். மொத்தம் 17 அறைகளுகு அவருக்குத்தானாம். அப்படி என்ன அறைகள் இருக்கிறதென்று பார்த்தால் டென்னிஸ் கோர்ட், ஸ்பா, தனி அலுவலகம், உணவு உண்ணும் அறை, படுக்கை அறை மற்றும் ஊடகங்களை சந்திக்க தனி ஹால் ஆகிய வசதிகள் உள்ளனவாம். அதுமட்டும் அல்லாமல் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் உணவுகள் எப்போது தயாராக இருக்குமாம்.