fbpx

ஆரணி அருகே உள்ள மலைப்பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் கள்ளச்சாராய வேட்டை…..! காவல் துறையினர் அதிரடி…..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், ஆரணி பகுதியில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கலாச்சாராய சோதனையில் இதுவரையில் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.

ஆரணி உட்கோட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையினர் ஊசிமலை குப்பம், காப்புக்காடு அத்திமலைபட்டு, காரமடை மற்றும் கண்ணமங்கலம் நாமக்காரமலை, சந்தவாசல், படவேடு போன்ற பகுதிகளில் தனித்,தனி குழுக்களாக சென்று நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அதோடு மலைப்பகுதிகளில் இருக்கின்ற புதர்கள் நிலச்சரிவுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்று ரூம் கேமராக்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

Next Post

தொடர் மது விற்பனை திருப்பத்தூர் அருகே…..! இளைஞர் குண்டர் சட்டத்தில் அதிரடி கைது….!

Thu May 25 , 2023
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பால்நாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளவரசன்( 31) என்பவர் கர்நாடக மாநில மதுபான பாட்டில்களை அதிகளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 745 லிட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்திருக்கின்றனர். வெளி மாநில மதுபான பாட்டில்களை அவர் தொடர்ந்து விற்பனை […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like