புத்தாண்டு தினத்தில் வயதான உறவினர்கள், சிறார்களை வாழ்த்தி பணம் வழங்குவது வழக்கம்.. இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தைகள் பணத்தை தவறாகப் பயன்படுத்தவோ, அதிகமாகச் செலவழிக்கவோ கூடாது என்பதற்காக பெற்றோர்கள் பணத்தை வாங்கி வைத்திருப்பார்கள். அப்படி ஒரு சந்தர்பத்தில், சீனாவில் சிறுவன் ஒருவன் போலீசுக்கு போன் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள லான்சோ நகரத்தில் இருந்து சிறுவன் ஒருவர் போலீசுக்கு கால் செய்துள்ளான். போன் காலை எடுத்த அதிகாரியிடம் அந்த சிறுவன் “போலீஸ் அங்கிள் என் வீட்டில் ஒரு திருடன் இருக்கிறான். அவன் என் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டான்” எனத் தெரிவித்தான்
இதையடுத்து போலீஸ் அந்த முகவரியை கண்டறிந்து நேரில் சென்று பார்த்தார். அப்போது சிறுவன் போலீஸை பார்த்ததும் உற்சாகமடைந்து “போலீஸ் அங்கில்! நீங்கள் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டீங்களா..? இந்த திருடனை பிடித்துச் செல்லுங்கள்” எனத் தெரிவித்தான்.
சிறுவனின் தந்தை உடனடியாக காவல்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டு, “மன்னிக்கவும். என் மகனுக்கு தெரியாது. அவன் உண்மையில் காவல்துறையை அழைப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார். பணத்தைப் பாதுகாப்பது தொடர்பாக சிறுவன் தன்னுடன் சண்டையிட்டதாகவும், பின்னர் மொபைல் போனைப் பயன்படுத்தி போலீசாருக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் விளக்கினார்.
இதையடுத்து அந்த காவல் அதிகாரி சிறுவனிடம், “நீ உன் அப்பாவிடம் பணத்தை கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள். உனக்கு எப்போது தேவையோ அப்போது அவரிடம் இருந்து வாங்கி செலவு செய்து கொள். அவர் உன் பணத்தை உனக்கு தருவார் சரியா?” என கேட்டார். இதனிடையே சிறுவன் மீண்டும் இதுபோன்ற தவறை செய்யாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என காவல் அதிகாரி தந்தைக்கு அறிவுறுத்தினார்.
Read more : செகண்ட் ஹேண்ட் கார் வாங்க திட்டமா..? இந்த விஷயங்களை கவனிங்க.. இல்லைனா சிக்கல் தான்..!!