fbpx

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இறந்த சிறுவன்..! 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கண்ணம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ஹரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 17 வயது இப்பகுதியில் அடிக்கடி திருடுவது வழக்கம்.

இந்நிலையில், ஹரி மீது இரண்டு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். திருட்டு வழக்கு தொடர்பாக, தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர், சிறுவனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நேற்று, நீதிமன்ற உத்தரவுப்படி, செங்கல்பட்டில் உள்ள சீரா சீர்திருத்த பள்ளியில், ஹரி அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஹரிக்கு வலிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை செங்கல்பட்டு அடுத்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் அதற்குள் ஹரி இறந்து விட்டார். ஹரியின் உடல் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்பின், இறந்தவரின் உடலை நீதிபதி இன்று பார்வையிட்டு விசாரணை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

மெட்ரோ ரயில் கதவில் பெண்ணின் ஆடை மாட்டி இழுத்து செல்லப்பட்ட.. கொடூர சம்பவம்..!

Sun Jan 1 , 2023
அக்டோபர் 21 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாலை 4:10 மணியளவில் சாகலா ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயிலின் கதவுகளுக்கு இடையில் ஆடைகள் சிக்கிக் கொண்ட பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதை வைரலான வீடியோவில் காணலாம்.  அருகில் இருந்த ஒருவர் அவரை காப்பாற்ற முயன்றார், ஆனால் பலனில்லை, அந்த பெண் ரயிலுடன் இழுத்துச் செல்லப்பட்டார். ரயில் வேகமாகச் […]

You May Like