fbpx

அசத்தல்..! அரசு பள்ளி மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தில் வாழைப்பழம்…! அட்டகாசமான அறிவிப்பு…!

அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தில் வாழைப்பழம் கொடுக்கும் இன்று முதல் தொடங்க உள்ளது.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முன்னோடி திட்டம் இன்று முதல் கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சியால் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. காலை உணவில் ஆப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் கறி ஆகியவை அடங்கும். மாணவர்களுக்கு முட்டை மற்றும் வாழைப்பழமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இத்திட்டத்தின் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுகாதார துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மாணவர்களிடையே இரத்த சோகையின் சில நிகழ்வு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை போக்கும் விதமாக இந்த புதிய காலை உணவு திட்டத்தை 150 மாணவர்களுக்கு தொடங்க உள்ளதாக நிலைக்குழு தலைவர் வி.ஏ. ஸ்ரீஜித் கூறியுள்ளார்.

Vignesh

Next Post

பெரும் சோகம்...! மூத்த அரசியல்வாதி காலமானார்...! பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்...!

Mon Jan 9 , 2023
மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரிபாதி உடல் நலக்குறைவாழ் காலமானார். பாஜக மூத்த தலைவரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 88 வயதில் காலமானார். மூன்று முறை உ.பி., சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்த அவர், டிசம்பரில், கை எலும்பு முறிவு மற்றும் மூச்சுத் திணறலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக ICU-வில் அனுமதிக்கப்பட்டார். […]

You May Like