பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 முதல் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை நிறுத்தி வைப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) முதல் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்களுக்கும் பொருந்தும்.
அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து செல்லுபடியாகும் விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்கள் 2025 ஏப்ரல் 29 வரை மட்டுமே செல்லுபடியாகும். தற்போதைய அறிவிப்பின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் விசாக்கள் காலாவதியாகும் முன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.