fbpx

#Breaking : நாடு முழுவதும் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்புக்கு தடை… மத்திய அரசு அறிவிப்பு..

நாடு முழுவதும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களின் அலுவலகங்கள், வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சமீபத்தில் சோதனை நடத்திய நிலையில், நேற்று மீண்டும் 8 மாநிலங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்காக நிதி திரட்டியது, உள்நாட்டில் மத கலவரத்தை தூண்டுதல், இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர ஊக்குவித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில், நாடு முழுவதும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை சேர்ந்தவர்களின் அலுவலகங்கள், வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த 22ம் தேதி சோதனை நடத்தினர்.

தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டெல்லி, கர்நாடகா, மும்பை, உத்தரப் பிரதேசம், அசாம், மத்திய பிரதேசம், கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 8 மாநிலங்களில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகளும், அந்தந்த மாநில போலீசாரும் நேற்று அதிகாலையில் திடீர் சோதனை நடத்தினர். அதிகாலை 12.30 மணி முதல் இந்த சோதனை நடைபெற்றது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் நடந்த சோதனையின் போது பாதுகாப்பிற்காக துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அதிகபட்சமாக கர்நாடகாவில் 13 மாவட்டங்களில் நடந்த சோதனையில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் 30 பேரும், அசாமில் 25 பேரும், மத்திய பிரதேசத்தில் 21 பேரும், குஜராத்தில் 17 பேரும், உபி.யில் 44 பேரும், மகாராஷ்டிராவில் 6 பேரும் என 8 மாநிலங்களில் 247 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நேற்று விடுத்த அறிக்கையில், ‘பாஜ ஆளும் மாநிலங்களில் தடுப்பு காவல் என்ற பெயரில் அதிகப்படியான கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. பிஎப்ஐயை குறிவைத்து நடத்தப்படும் இந்த சூழ்ச்சி, ஜனநாயகப் போராட்டங்களுக்கான உரிமையை தடுப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஒன்றியத்தில் உள்ள இந்துத்துவா ஆட்சியின் 2 அடிமைகளாக என்ஐஏ.வும், அமலாக்கத்துறையும் உள்ளன’ என கூறப்பட்டுள்ளது.

மேலும் ‘பாஜ ஆளும் மாநிலங்களில் தடுப்பு காவல் என்ற பெயரில் அதிகப்படியான கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. பிஎப்ஐயை குறிவைத்து நடத்தப்படும் இந்த சூழ்ச்சி, ஜனநாயகப் போராட்டங்களுக்கான உரிமையை தடுப்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஒன்றியத்தில் உள்ள இந்துத்துவா ஆட்சியின் 2 அடிமைகளாக என்ஐஏ.வும், அமலாக்கத்துறையும் உள்ளன’ என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.. மேலும் அந்த அமைப்புகள் சட்டவிரோதமானவை என்று தெரிவித்துள்ள மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு இந்த தடை தொடரும் என அறிவித்துள்ளது.. பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த அறீவிப்பு மத்திய அரசு அதிகாரப்பூர்வ அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

வாயால் வடை சுட்ட வடிவேலு; பெருந்தன்மையுடன் பதிலளித்த போண்டாமணி: ஆதங்கத்தில் ரசிகர்கள்.!

Wed Sep 28 , 2022
வடிவேலு மற்றும் விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் தன்னுடைய காமெடி நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் போண்டாமணி. இலங்கை தமிழரான போண்டா மணிக்கு தற்போது உடல்நலக்குறைவால் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது. இதை தொடர்ந்து மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் தவித்த போண்டாமணிக்கு தனுஷ், விஜய் சேதுபதி, போன்றோர் ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்துள்ளனர். சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு […]

You May Like