இமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் மாயமாகியுள்ளார்.
இமாச்சல் பிரதேச மாநிலம் கஷங் நாலா பகுதியில் சட்லெஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி மாயமாகியுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் ஓட்டுநர் தஞ்சின் உயிரிழந்த நிலையில், வெற்றியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவரது நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால், அவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.