நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி அரியலூர் – மணகெதி, திருச்சி – கல்லக்குடி, வேலூர் – வல்லம், விழுப்புரம் – தென்னமாதேவி, திருவண்ணாமலை – இனம்காரியாந்தல் ஆகிய சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Tasmac | மதுப்பிரியர்கள் ஷாக்..!! தமிழ்நாட்டில் இழுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!!