முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் ஆட்சியில் அரசு கொறடாவாகவும் இருந்த துரை. கோவிந்தராஜன் காலமானார். அவருக்கு வயது (85).
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடக்கூரில் 1937ஆம் ஆண்டில் பிறந்தார் துரை. கோவிந்தராஜன். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 1977ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவோணம் தொகுதியில் இருந்தும், 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருவையாறு தொகுதியிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் ஆட்சியில் அரசு கொறடாவாகவும் இருந்த துரை. கோவிந்தராஜன் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், தஞ்சையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.