தற்போது உலகின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் உலகையே அதிர வைத்த பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வை இந்த நடநெடுக்கத்தால் இழந்தனர். இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில் நியூசிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இவை ரிட்டர் அளவுகோலில் ஆருக்கு மேல் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை சரியாக 5:13 மணிக்கு இந்திய மியன்மார் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் விக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் மியான்மாரில் வாங்க்சிங் நகரில் இருந்து 76 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 112 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வுகள் ஏற்பட்ட பகுதிகளில் பெரிய நகரங்கள் எதுவும் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.