தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.
சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் இருக்கின்ற பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தி வருகிறது.
இவர் மீது போடப்பட்டிருந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் இவரை சமீபத்தில் விடுதலை செய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை தற்போது இவர் தொடர்பான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
நீதிமன்றம் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று தெரிவித்து விடுதலை செய்துவிட்ட நிலையிலும், அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தி வருகிறது. மேலும் இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் அமைச்சர்கள் ஊழல் பட்டியல் தன்னிடம் இருக்கிறது. அதன் இரண்டாவது பட்டியலை மிக விரைவில் வெளியிடுவேன் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை அதன் விளைவாகத்தான் இந்த அமலாக்கத்துறை சோதனை தற்போது நடைபெறுகிறதா என்ற சந்தேகமும் இருந்திருக்கிறது.