தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவர் தொடர்பான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது.
இதன் காரணமாக, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு அமைச்சரை அமலாக்கத்துறை சுற்றி வளைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் தான் அமைச்சர் பொன்முடியின் இல்லம் அவர் தொடர்பான அலுவலகங்கள் உட்பட 13 இடங்களில் அமராக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது அவருடைய மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணி வீட்டிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. கௌதம் சிகாமணி வெளிநாடுகளில் முதலீடு செய்த வழக்கில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருந்த நிலையில், மத்திய ரிசர்வ் படை உதவியுடன் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.