அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து வரும் 21ஆம் தேதி அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியின் தலைமை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதோடு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவற்றை கண்டித்தும் அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக முழுவதும் இருக்கின்ற மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு வரும் 21ஆம் தேதி காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்திருக்கிறார்.