fbpx

BREAKING | அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தவர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி. அப்போது 2008ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரிய வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசனுக்கு ஐ.பெரியசாமி முறைகேடாக ஒதுக்கியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.

முதலில் கீழமை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த நிலையில், கடந்தாண்டு மார்ச் மாதம் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தான், கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். அதன் பிறகு விசாரணை தொடர்ந்து நடந்த நிலையில், தான் இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுத்ததை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Read More : BREAKING | சாந்தனின் உடல்நிலையில் பின்னடைவு..!! மருத்துவர்கள் தொடர் சிகிச்சை..!!

Chella

Next Post

Chhattisgarh: 13 வருடமாக நடந்த கொடூரம்.! உறவுக்கார பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நடிகர் கைது.!

Mon Feb 26 , 2024
சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான மனோஜ் ராஜ்புத், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ராஜ்புத். இவர் நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த […]

You May Like