fbpx

#BREAKING : தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம் – அரசு உத்தரவு

தமிழகத்தில் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஏடிஜிபி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஏடிஜிபியாக இருந்த அருண் ஆவடி மாநகர காவல் ஆணையராக நியமனம். ஆவடி காவல் ஆணையராக இருந்த சந்தீப்ராய் ரத்தோருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள சந்தீப்ராய் ரத்தர் சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமனம். சென்னை பூக்கடை துணை ஆணையராக ஸ்ரேயா குப்தா நியமனம்.

லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங்க் அதே துறைக்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். டான்ஜெட்கோவில் விஜிலென்ஸ் ஏடிஜிபியாக இருந்த வன்னிய பெருமாள் அதே பிரிவில் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக சஷாங்க் சாய் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான், நாகை எஸ்.பி.யாக ஹர்ஷ் சிங், ஈரோடு எஸ்.பி.யாக ஜவஹர், நாமக்கல் எஸ்.பி.யாக ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்.பி.யாக மணிவண்ணன், செங்கல்பட்டு எஸ்.பி.யாக சாய் பிரனீத், திருப்பூர் எஸ்.பி.யாக சாமிநாதன் ஆகியோர் நியமனம்.

Kathir

Next Post

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வரும்..! -முன்னாள் நிதி அமைச்சர் கருத்து...

Fri May 19 , 2023
2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் ஆரம்பத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் பிறகு, காண்பதே அரிதாகிவிட்டது. இந்நிலையில் ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30, வரை, பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் […]

You May Like