fbpx

விக்கிரவாண்டியில் ஓட்டுக்கு லஞ்சம்..!! கையும் களவுமாக சிக்கிய திமுக..!! வேட்பாளரை தகுதி நீக்கம் பண்ணுங்க..!! சீறிய அன்புமணி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி – சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில், திமுக கிளை செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான ஏ.சி. இராமலிங்கம் என்பவரின் வீட்டில் வைத்து, வாக்காளர்களுக்கு கையூட்டாக வழங்கப்பட்டு வந்த வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் பாமகவினர் கைப்பற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

தேர்தல் விதிகளை மீறிய திமுகவினரின் இந்த சட்டவிரோத செயல் கண்டிக்கத்தக்கது. தேர்தல் விதிகளை மதிக்காமல் திமுகவினர் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை கையூட்டாக வழங்கியதைக் கண்டித்து, பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமலிங்கத்தின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி – சேலைகளை திமுகவினர் கொல்லைப்புறம் வழியாக எடுத்துச் செல்ல உதவி செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் மக்களின் கோபத்தை நன்றாக பார்க்க முடிகிறது. இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கும் திமுக, அரசு எந்திரத்தின் உதவியுடன் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கவும், தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கவும் முயல்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்பினால், தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததற்காக திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்றார்.

Read More : Ajith | ஷாலினிக்கு என்ன ஆச்சு..? ஓடோடி வந்த அஜித்..!! மருத்துவமனையில் அறுவை சிகிச்சை..!!

English Summary

Anbumani Ramadoss has insisted that the DMK candidate should be disqualified as the Vetti-Sales kept by the DMK to bribe the votes in the Vikravandi by-election have been confiscated.

Chella

Next Post

சானியா, கர்மானுக்குப் பின் கோப்பையை வென்ற 3-வது இந்திய வீராங்கனை..!! யார் இந்த சஹாஜா..?

Wed Jul 3 , 2024
Sahaja Yamalapalli becomes third Indian woman to win pro title in US

You May Like