fbpx

இங்கிலாந்து பெண்ணுக்கு இந்தியாவில் தூக்கு தண்டனை!… அதிரவைக்கும் பின்னணி!

கணவனை கொன்ற வழக்கில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ரமன்தீப் கௌர் என்ற பெண்(38) இந்தியாவை சேர்ந்த சுக்ஜீத் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து இருவரும் இந்தியாவின் டெல்லியில் வாழ்ந்து வந்துள்ளனர். இருப்பினும் பணிக்காக கணவர் மட்டும் இங்கிலாந்தில் தங்கியிருந்ததாகவும் கடந்த 2016ஆம் ஆண்டு, விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது  கணவர் சுக்ஜீத் சிங்குக்கு மனைவி உணவில் தூக்க மருந்தைக் கலந்து கொடுத்திருக்கிறார். அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு கதவைத் திறந்து Gurpreet Singh என்னும் நபரை வீட்டுக்குள் வரவழைத்திருக்கிறார்.

இதையடுத்து தூங்கிக்கொண்டிருந்த கணவர் தலையை சுத்தியலால் அந்த நபர் அடித்திருக்கிறார். பின்னர் அவரிடமிருந்த கத்தி ஒன்றை வாங்கிய மனைவி ரமன்தீப் கௌர், தன் கணவர் கழுத்தைக் கத்தியால் அறுத்து அவரைக் கொலை செய்துள்ளார். .ஆனால், தம்பதியரின் இளைய மகன், ஒன்பது வயது சிறுவன், நடந்தததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறான். அவன் தன் தாய் கொடுத்த தூக்க மருந்து கலந்த உணவை சாப்பிடாததால், சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறான்.

அப்போது, தன் தந்தையின் நெஞ்சின் மீது உட்கார்ந்திருந்த தன் தாய், தலையணையை அவர் முகத்தில் வைத்து அழுத்திக்கொண்டிருப்பதை அவன் பார்த்திருக்கிறான்.அவன் அளித்த சாட்சியத்தின்பேரில், ரமன்தீப் கௌர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவிய குர்பிரீத் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார். ரமன்தீப் கௌரின் கணவரான சுக்ஜீத் சிங்கும், குர்பிரீத் சிங்கும் சிறு வயது நண்பர்கள். தன் நண்பரைக் காண அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்த குர்பிரீத்துக்கும், நண்பரின் மனைவியான ரமன்தீப் கௌருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த ரமன்தீப் கௌர், விடுமுறைக்காக இந்தியா வந்த நேரத்தில், காதலர் உதவியுடன் கணவரைக் கொன்றுவிட்டார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கில், தன் மகன் கண் முன்னே கணவரைக் கொலை செய்த ரமன்தீப் கௌருக்கு தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஜெயலலிதாவை வியப்படைய வைத்த பங்காரு அடிகளார்...! அப்படி என்ன செய்தார்...? தோழி சொன்ன தகவல்...

Fri Oct 20 , 2023
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவர் நிறுவிய ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்ததால், 1980களில் மிகவும் பிரபலம் அடைந்தவராக இருந்தார். மேல்மருவத்தூரைச் சேர்ந்த பங்காரு அடிகளார், பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் வசித்த பகுதியில், அருள்வாக்கு சொல்வதில் தொடங்கி பிரபலம் அடைந்தார். ஆதிபராசக்தியின் […]

You May Like