சென்னை மாநகர பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் கூலித்தொழிலாளியான மணிகண்டன் எனபவர் வசித்து வருகிறார். மேலும் இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
இந்த நிலையில் மணிகண்டன் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். வழக்கம் போல் நேற்று முன்தினமும் , அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணினுடைய கணவரின் தம்பி வேலு என்பவரும் அங்கு சென்ற நிலையில், மணிகண்டனைப் பார்த்ததும் ஆத்திரமடைந்தார். அண்ணன் இல்லாத நேரத்தில் இந்த வீட்டில் என்ன வேலை எனக் கேட்டு கூலித்தொழிலாளியை வேலு அடித்துள்ளார்.
இதனால் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி லதா வண்ணார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் தங்கவேலுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வண்ணார்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.