திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி, வேலூர் கருக்கன்காட்டு தோட்டத்தில் வசித்து வரும் கனகராஜ் மகன் கனகசபாபதி (27). இவரது தம்பி கவியரசு (24). இவர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே பூர்வீக சொத்து காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கவியரசு மற்றும் அவரது நண்பர்கள் நவீன், மூர்த்தி ஆகியோர் கனகசபாபதியின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டின் கதவு மற்றும் வீட்டை அடித்து உடைத்தனர்.
அதன் பிறகு வீட்டிற்குள் இருந்த கனகசபாபதியை வெளியே இழுத்து வந்து கட்டை மற்றும் கம்பியால் அடித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கனகசபாபதியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகசபாபதி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கனகசபாபதியின் மனைவி இந்துமதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரின்பேரில் அவினாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கவியரசு மற்றும் நவீன் ஆகியோரை கைது செய்தனர். அதன்பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சொத்துக்காக தம்பியே அண்ணனை அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.