fbpx

நெஞ்சே பதறுது.! “சேர்ந்து வாழ கசக்குதோ..” இளம் பெண்ணை பிளேடால் கீறிய கணவன்.!

சென்னை அருகே மனைவியை பிளேடால் கீறிய வழக்கில் கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக்(25). இவருக்கு தமிழ்விழி(23) என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது .

திருமணமான நாளிலிருந்து கணவன் மற்றும் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்விழி தனது பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார். மேலும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தமிழ் விழியை அடிக்கடி சந்தித்து வந்த அபிஷேக் தன்னுடன் இணைந்து வாழுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு தமிழ்வழி மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வேலைக்கு சென்று விட்டு திரும்பிய மனைவியை சந்தித்து இருக்கிறார் அபிஷேக். அப்போது தன்னுடன் சேர்ந்து வாழுமாறு மீண்டும் வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு தமிழ்விழி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அபிஷேக் தன் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் தமிழ்விழியின் கை, தொடை, கால் உள்ளிட்ட இடங்களில் பிளேடால் கீறி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த தமிழ்விழியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய அபிஷேக்கை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சேர்ந்து வாழ மறுத்ததால் இளம்பெண் பிளேட்டால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

அஜித் மச்சினனுடன் உறவு..!! தன்னைவிட 4 வயது குறைவானவருடன் ஷகீலா செய்த சம்பவம்..!! பகீர் தகவல்..!!

Wed Jan 10 , 2024
தமிழில் கடந்த 1994ஆம் ஆண்டு ‘ப்ளே கேர்ள்ஸ்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷகீலா. இந்த படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்த நிலையில், ஷகிலா அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே, மிகவும் போல்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து, ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை உடைத்து, ஷகிலாவின் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது என்றால், அது குக் வித் கோமாளி […]

You May Like