fbpx

மனைவி மற்றும் 3 மகள்களை வெட்டிக் கொன்ற கொடூர தந்தை!

பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டம், பவாரியா கிராமத்தில் வசித்து வந்த ரேஷ்மா கதுன் (வயது 40) என்ற பெண் மற்றும் அவரது மகள்கள் அர்பன் கதுன் (வயது 15), ஷாப்ரன் கருன் (வயது 12) மற்றும் ஷாஜாதி கதுன் (வயது 9) ஆகியோர் இன்று அவர்களின் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த கொடூரம் நடந்துள்ளது.அவர்களின் கழுத்து மற்றும் உடலின் பிற இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரேஷ்மாவின் கணவர் அன்சாரி தலைமறைவாகிவிட்டார். அவர்தான் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அன்சாரிக்கு இரண்டு முறை திருமணமாகி உள்ளது. முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இரண்டாவது மனைவியான ரேஷ்மாவுக்கு 5 மகள்கள் பிறந்தனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. மற்றொரு மகளை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு உத்தர பிரதேச மாநிலத்தின் சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Rupa

Next Post

காங்கிரஸ் கட்சி நாளை போராட்டம்! திடீர் அறிவிப்பால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!

Fri Mar 29 , 2024
வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது ‘வருமான வரித்துறையால் காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 – 2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக, காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் தாமதமாக வருமான வரி தாக்கல் […]
காங்கிரஸ் தலைவர் தேர்தல்..! வாக்காளர் அட்டை..! இதுவே முதல்முறை..! வெளியான பரபரப்பு தகவல்..!

You May Like