தற்போது எங்கு பார்த்தாலும் கொலை செய்வதை தொடர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசுகின்ற கொடூர செயல் அதிகாரி வருகிறது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் குப்பை தொட்டி ஒன்றில் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆணின் இடது கை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் பெண் உட்பட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் காந்திபுரம் பகுதியில் அழகு நிலையத்தில் வேலை பார்த்த பிரபு என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் இவர் கள்ளக்காதல் விவகாரத்தினால் கொலை செய்யப்பட்டு மேலும் தடயங்களை மறைக்கும் நோக்கத்தில் தலை, உடல் மற்றும் ஒரு கை என உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவரில் கட்டி துடியலூர் அருகே உள்ள கிணற்றில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையில் வெவ்வேறு இடத்தில் வீசப்பட்ட அவரது உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.